Politics
“இக்கட்டான சூழலிலும் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்..” பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் இந்தியா துணை நிற்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், இந்தியா தோளோடு தோள் கொடுத்து நின்றுவருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்குச் சென்றார். கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இலங்கைத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அந்தவகையில் இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா-இலங்கை இடையிலான உறவு என்பது வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் இலங்கைக்கு இந்தியா துணையாக நின்றிருப்பதாகவும் அவர், தெரிவித்தார்.
#WATCH | Colombo, Sri Lanka: Defence Minister Rajnath Singh says, "India-Sri Lanka relations are not merely of recent origin; they are deeply rooted in history. India has stood by Sri Lanka during every difficult time, and I wish to state that whenever a crisis arises in Sri… pic.twitter.com/yQTcmCGBfe
சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்துகளுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும் இந்தியாவின் கருத்துகளை சர்வதேச நாடுகள் கவனிப்பதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
