Politics
3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!

செப். 8 - 10 வரை 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை செல்லவுள்ளது குறித்து...
இலங்கையில் நடக்கும் சந்திப்பில் இந்திய வம்சாவளியுடன் உரையாடவுள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தினர் அடங்கிய குழுவுக்கு ராஜ்நாத் சிங் தலைமை தாக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணத்தில் இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு, பொருளாதாரம், வணிக ஒத்துழைப்பு, மக்கள் உறவுகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மை பகிர்ந்துகொள்ளப்படும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலும், டித்வா புயல் பாதிப்பின்போது முதல் நபரான நிவாரணப்பொருள்களை வழங்கி உதவியதாலும் இருதரப்பிலான உறவு உந்துசக்தியை எட்டியுள்ளது.
அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் இருக்கும் என்றும், வலுவான கடல்சார் வணிகம், பாதுகாப்பு தளவாட கூட்டு ஒத்துழைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Defence Minister Rajnath Singh to undertake three-day Sri Lanka visit from Sept 8
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.