Arts, culture, entertainment and media
விருது விழாவில் ராணா டகுபதி தண்ணீர் பாட்டிலைத் தூக்கி வீசியது ஏன்? வெளியான பின்னணி!

14வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் எனும் சைமா(SIIMA) பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த விருது விழாவை கன்னடத் திரையுலகின் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான அகுல் பாலாஜி தொகுத்து வழங்கியிருந்தார்.
இவர் சிறந்த நடிகருக்கான விருது வென்ற தேஜா சஜ்ஜாவுடன் உரையாடியிருந்தார். மிராய் படத்திற்காக தேஜா சஜ்ஜாவு விருது வாங்கிய நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பி வந்தார். குறிப்பாக 2ஆம் பாகத்தில் ராணா டகுபதி நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். இதனை மீண்டும் மீண்டும் கேட்டதால் கீழே அமர்ந்திருந்த ராணா டகுபதி எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகத் தண்ணீர் பாட்டிலை தொகுப்பாளரை நோக்கி வீசி எறிந்தார்.
இது நிகழ்ச்சியில் இருப்பவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ராணா டகுபதி விளையாட்டாக எறிந்தது, பலரது கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக அதை பார்த்த பலரும் ராணா டகுபதி கோவத்துடன் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்ததாக நினைத்துக் கொண்டனர். ஆனால் அவர் விளையாட்டாக எறிந்ததும் அவருக்கும் தொகுப்பாளருக்கு எந்த கருத்து வேறுபாடு இல்லை எனவும் பின்பு தெரிந்து கொண்டனர். அதே சமயம் ராணாவும் தொகுப்பாளரும் நல்ல நண்பர் என்பதையும் அவர்களுக்கு இடையில் ஒரு விளையாட்டுத்தனமான உரையாடலாகவே அந்தத் தருணம் அமைந்திருந்ததையும் புரிந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)