Politics
விநாயகர் விசர்ஜன ஊர்வலம் திருப்பூரில் கோலாலக விழா (local)
திருப்பூர், செப். 18-– விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும், 5,000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், மாநகர மாவட்டம் சார்பில் மட்டும் 1,100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்வதற்கான ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு, செல்லம் நகர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து ஊர்வலங்கள் புறப்பட்டன.
ஊர்வலத்தில், செண்டை மேளம், தெய்யம் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் ‘மெகா’ சைஸ் சிவன், விநாயகர் சிலைகள் இடம்பெற்றன. நிறைவாக ஆலாங்காட்டில் ‘தமிழர் பண்பாடும் சனாதன ஹிந்து மதமும் ஒன்றே’ என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், கேரள மாநில தலைவர் சசிகலா, பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 1,400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.