Sport
முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமில்லை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 13) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படவில்லை.
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
The Indian team won the toss and elected to bowl in the first T20 match against Afghanistan.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.