ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்
விழுப்புரம்: மாவட்ட ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்டத்தில் இதுநாள் வரை கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ளாத முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுதாரர்கள், அனைத்து வகை ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நாளை அனைத்து ரேஷன் கடைகளிலும் நடக்கும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கைவிரல் ரேகை பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.