ரேஷன் கடைகளில் நாளை விரல் ரேகை பதிவு முகாம்
திருவள்ளூர், செப். 18– திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், நாளை விரல் ரேகை பதிவு முகாம் நடைபெற
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், நாளை விரல் ரேகை பதிவு முகாம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள், ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’ ஆகிய ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும், தங்களது விரல் ரேகையை பதிவு செய்திருக்க வேண்டும்.
இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாத ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பத்தினர், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில், நாளை நடைபெறும் முகாமில், தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.