Politics
சென்னையில் தேமுதிகவின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் விழா

தேமுதிக திமுக கூட்டணியில் தான் உள்ளது எனவும் மதுராந்தகம் , தாரபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் 22ஆ ம் ஆண்டு கட்சி துவக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கியதைத் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பிரார்த்தனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.