Economy, business and finance
கோவில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
ரிஷிவந்தியம்: பாவந்துாரில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சுவாமி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் சிவக்குமார்,46; இவர், அதே பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார். கடந்த 6ம் தேதி இரவு சிவக்குமார் கோவிலை பூட்டி வீட்டிற்கு சென்ற நிலையில், மறுநாள் 7ம் தேதி காலை வழக்கமான பூஜைகளை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார்.
அப்போது, கோவில் கதவின் பூட்டு உடைந்த நிலையில் இருந்ததை பார்த்து சிவக்குமார் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, கோவிலுக்குள் சென்று பார்த்ததில் அம்மன் சுவாமி கழுத்தில் இருந்த தங்க தாலி, காசு உள்ளிட்ட 3 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது.
புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து, சந்தேகத்தின் அடிப்படையில் இருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.