Lifestyle and human interest
சென்னைக்கு கஞ்சா கடத்திய மூன்று பேருக்கு 14 ஆண்டு
சென்னை: பள்ளிக்கரணை, காமாட்சி நினைவு மருத்துவமனை அருகே, பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், 2024, பிப்., 11ல் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 101 கிலோ கஞ்சா இருந்தது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஜிபன் பிஸ்வாஸ், ஒடிசாவைச் சேர்ந்த பலராம் புஜாரி மற்றும் சாஷிகுமார் ஆகியோர், ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை இரண்டாவது கூடுதல் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி, மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள், அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மூவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.