Arts, culture, entertainment and media
அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் அண்ணாதுரையின், 118வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகித்து, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, மாவட்ட முன்னாள் செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் பரிதா நவாப், முன்னாள் நகர செயலாளர் நவாப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அவரது சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா தலைமையில், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


