Lifestyle and human interest
12 கிலோ கஞ்சா பறிமுதல்
குன்றத்துார்: குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் திரிந்த சூர்யபிரகாஷ், 24, வினித், 21, ஆகிய இருவரை, திருமுடிவாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம், இருந்து 3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர் ரயில் நிலைய அருகே ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் நேபாளத்தைச் சேர்ந்த ககன் பகதுார், 27, மற்றும் ஒரு பெண்ணை, செம்பியம் போலீசார் நேற்று கைது செய்தனர். 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பூக்கடை, வால்டாக்ஸ் சாலையில் நின்றிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஜித்து, 27, என்பவரும் கைதானார், 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வியாசர்பாடி, சர்மா நகர் எஸ்.ஏ., காலனி மூன்றாவது தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்ற லதா, 40, என்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், பேசின்பாலம் சால்ட் கோட்ரஸ் பகுதியில் கஞ்சா விற்ற புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தசரதன், 37, ராஜேஷ் என்ற பெரிய கைமா, 20, என இருவரை, பேசின்பாலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.