Politics
வ.உ.சி.,யின் 155வது பிறந்த நாள் கொண்டாட்டம்
நாமக்கல்:நாமக்கல் - திருச்சி சாலை, ஆண்டவர் பங்க் எதிரே உள்ள சோழிய வேளாளர் திருமண மண்டபத்தில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின், 155வது பிறந்த நாள் விழா, சோழிய வேளாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. சங்க துணை தலைவர்கள் ஜெகநாதன், நாகரத்தினம் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் ரமேஷ் அண்ணாதுரை, பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, நாட்டின் விடுதலைக்காக வ.உ.சி., ஆற்றிய அளப்பரிய பணிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை முன்னெடுத்த அவரது தேசப்பற்று, துாத்துக்குடி சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி, இந்தியர்களின் சுயமரியாதையையும், பொருளாதார சுதந்திரத்தையும் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகள் குறித்து நினைவு கூரப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் நகர சோழிய வேளாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழார்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.