நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்
கோவை: சிறிய அளவிலான, 250 நாட்டுக்கோழிகளுடன் கூடிய பண்ணைகள் அமைக்க, பயனாளி களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழிகள் இலவசமாகவும், பண்ணை அமைக்கவும், தீவன செலவுக்கும் ரூ.1.46 லட்சம் மானியம் வழங்கப்படும்.
கிராமப்பகுதியில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 625 சதுர அடி சொந்த நிலம் வேண்டும். விவரும் 26ம் தேதிக்குள், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களிடம் விண்ணப்பிக்கலாம்.