தொத்த முக்கை கிராமத்தில் மீண்டும் கரடி நடமாட்டம்
கோத்தகிரி: கோத்தகிரி தொத்தமுக்கை கிராமத்தில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் தொடர்வதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி அருகே, தொத்தமுக்கை கிராமத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கரடி தாக்கியதில், தம்பதியர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள இக்கிராமத்திற்கு, பஸ் வசதி இல்லை.
இதனால், பிரதான சாலையில் இருந்து, 2 கி.மீ., தொலைவிற்கு, இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, தெரு விளக்குகள் இல்லாமல், மக்கள் இருளில் நடந்து சென்று வருகின்றனர். தற்போது, இப்பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் உள்ளது. மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.