Religion
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அன்னுார்: காரனுர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அக்கரை செங்கப்பள்ளி அருகே காரனூரில்,
அன்னுார்: காரனுர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அக்கரை செங்கப்பள்ளி அருகே காரனூரில், அரச மர வேம்பு விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன், பத்ரகாளியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் மாலை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாளிகை ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இரவு முதற்கால வேள்வி பூஜை நடந்தது.
நேற்று காலை 10:30 மணிக்கு மாரியம்மன் கோவில், விமான கலசங்களுக்கும், அரச மர வேம்பு விநாயகர், பத்ரகாளியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தர்மகர்த்தா ரவி தலைமையில், ஓதிமலை செந்தில்நாதன் குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். தொழிலதிபர் ஆறுமுகசாமி உட்பட ராமே கவுண்டனுார், காரனுர், தொட்டியபாளையம், செலம்பர கவுண்டன் புதுார் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கவுள்ளது.



