Lifestyle and human interest
கிராமங்களில் 24 மணி நேரமும் எரியும் தெரு விளக்குகளால் விரயமாகும் மின்சாரம்
தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு எல் நினோ காரணமாக வெப்பம் இன்னம் குறையவில்லை அதனால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின் உற்பத்தியை விட தேவை அதிகமாக உள்ளது. அதனால்தான் அடிக்கடி மின் தடை என ஒருபுறம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடலுார் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் போடப்பட்டுள்ள மின் விளக்குகள் யாவும் மிக குறைந்த ‘வாட்’ உடைய எல்.இ.டி., பல்புகள் தான். இருப்பினும் அதை எப்போதும் ஆன்–ஆப் செய்வதே இல்லை. ஊராட்சித் தலைவர் பதவியில் வகிக்கும்போது ஓரளவுக்கு இது கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அறவே கடைபிடிப்பதில்லை.
இதனால் கிராமங்களில் 24 மணி நேரமும் எரிந்த படியே உள்ளது. குறிப்பாக கடலுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இதை பற்றி கண்டு கொள்வதே இல்லை. கிராமங்களில் எரியும் தெருவிளக்குகளை இரவு நேரங்களில் ஆப்–ஆன் செய்வது யார் பொறுப்பு என்பதையெல்லாம் அந்தந்த கிராமங்களில் போர்டு வைத்தால் சிறப்பாக இருக்கும.