புறவழி சாலையை ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் பாதிப்பு
மதுராந்தகம், செப். 5-– - மதுராந்தகம் அருகே உள்ள புறவழி சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன

மதுராந்தகம் அருகே உள்ள புறவழி சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
மதுராந்தகத்தில், சென்னை – - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த, அலுவலகத்திற்கு செல்லும் வகையில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி புறவழி சாலை உள்ளது.
இந்நிலையில், அய்யனார் கோவில் சந்திப்பு பகுதி வழியாக செல்லும் வாகனங்கள், புறவழி சாலையை பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், புறவழி சாலையை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அய்யனார் கோவில் சந்திப்பு சாலை அருகே நெரிசலை தவிர்க்கவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், புறவழி சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், சரக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், சாலையை ஆக்கிரமித்து தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.