Crime, law and justice
ஓட்டல்கள், விடுதிகளில்ஆய்வு நடத்த திட்டம்
தேனி, செப்.5–மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள், உணவு தயாரிப்பு மையங்களில் தீவிர ஆய்வு நடத்த உள்ளதாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் சசிதீபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்கள், பள்ளி, கல்லுாரி விடுதிகள், தனியார் உணவு தயாரிப்பு மையங்களில் தொடர் ஆய்வு செய்ய மாநில உணவுப்பாதுகாப்பு ஆணையர் லால்வேனா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வை நவ., வரை மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது விதிமீறல்கள், உரிமம் இன்றி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பபடும். வெள்ளி தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். நிறுவனங்கள் பாதுகாப்பாக, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். ஆய்வின் போது உணவு வணிகர்கள் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.