Crime, law and justice
மாவட்டத்தில் ஓட்டல், பள்ளி விடுதிகளில் மூன்று மாதம் ஆய்வு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி விடுதிகளில் உணவு
மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி
விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், மூன்று மாதங்களுக்கு
ஆய்வு நடக்கிறது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது:
மாவட்டத்தில், மூன்று மாதத்திற்கு கண்காணிப்பு ஆய்வு மற்றும்
விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். ஆய்வுக்கு முன்னதாக,
உணவு நிறுவனங்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக உணவு நிறுவனங்களுடன் விளக்க கூட்டங்கள்
நடத்தப்படும். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில்
உள்ள, நிறுவனங்களின் உரிம பட்டியலுடன் நேரில் சென்று ஆய்வு செய்வர்.
உரிமம் இன்றி செயல்படும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு,
பதிவு சான்றிதழ் பெற உத்தரவிடப்படும். ஆய்வறிக்கை அனைத்தும்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் வாராந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
சந்தேகப்படும் இடங்களில் ஆய்வுக்காக உணவு மாதிரி சேகரிக்கப்படும்.
உணவு தயாரிக்கும் கூடம் சுகாதாரமாக இல்லாவிட்டால், 10 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதிக்கப்படும். உரிய உரிமம் இல்லாமல் இயங்கினால், 10
ஆயிரம், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், 10,000,
புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டால், 25 ஆயிரம்,
செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால், 5,000 ரூபாய் என
அபராதம் விதிக்கப்படும். உணவு தயாரிக்கும் இடம் மிகவும்
சுகாதாரமற்று காணப்பட்டால், உடனடியாக சீல் வைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.