திருச்சி, திருநெல்வேலிக்கு நேரடி பஸ் சேவை தேவை
வால்பாறை: பொள்ளாச்சி வழியாக, திருச்சி, திருநெல்வேலிக்கு நேரடி அரசு பஸ் இயக்க வேண்டும் என, எஸ்டேட் தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வால்பாறையில், திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, 64 கி.மீ., பயணித்து பொள்ளாச்சிக்கு சென்று, பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது.
எனவே, வால்பாறையில் வசிக்கும் எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.