வெளிநாட்டில் வேலை என மோசடி மூவருக்கு போலீஸ் வலை
குள்ளஞ்சாவடி, செப்.12- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பத்தை சேர்ந்தவர் வள்ளல்குமார்,42; இவர், கடந்தாண்டு கேரளாவில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தபோது, உடன் வேலை பார்த்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஜகுபர்கான், , கத்தார் நாட்டில், மாலில் மேலாளர் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம், உணவு, இருப்பிடம் இலவசம் என்றார்.
அதனை நம்பிய வள்ளல்குமார், ஜகுபர்கான் கூறியதன் பேரில் அவரது சகோதரிக்கு ரூ.1.70 லட்சம் பணத்தை அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து, வள்ளல்குமாரை, கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோது, ஜகுபர்கானின் உறவினர் நசீம் இம்ரான் என்பவர், அமெரிக்க - ஈரான் போரால் வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சில மாதத்தில் வேலை கிடைத்துவிடும். அதுவரை தங்கும் செலவை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.
அதிர்ச்சி அடைந்த வள்ளல்குமார், இந்தியா திரும்பினார். தொடர்ந்து அவர், தன்னை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பவதாக ஜகுபர்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மோசடி செய்துவிட்டதாக குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜகுபர்கான், அவரது சகோதரி பாத்திமா, உறவினர் நசீம் இம்ரான் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.