Politics
வ.உ.சி., பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம்: சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்த நாள் விழா, காஞ்சிபுரத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகியும், கப்பலோட்டிய தமிழன் என போற்றப்படும், வ.உ.சிதம்பரனாரின், 155-வது பிறந்தநாள் விழா, அனைத்துலக பிள்ளைமார் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் சார்பில், ஓரிக்கையில் நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர் கணேஷ், பாரதிதாசன் பள்ளி தாளாளர் அருண்குமார் உள்ளிட்டோர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து வ.உ.சி.யின் தியாகங்கள் மற்றும் நாட்டின் விடுதலைக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்து நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அனைத்துலக பிள்ளைமார் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகேஷ் செய்திருந்தார்.