Lifestyle and human interest
கரூரில் பலத்த மழை 48 மி.மீ., பதிவு
கரூர்:கரூரில் கடந்த சில நாள்களாகவே, கோடை வெயிலை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல்
கடந்த சில நாள்களாகவே, கோடை வெயிலை விட வெப்பத்தின் தாக்கம்
அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில், 105 டிகிரி வரை வெப்பம்
பதிவாகி வந்ததால், மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனால் மழை பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று முன்தினம், கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் மழைபெய்தது.ஒரு
மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக
கரூரில், 48 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அரவக்குறிச்சியில், 11.40,
அணைபாளையத்தில், 7.40, க.பரமத்தியில், 9.40 மி.மீ.,
பதிவானது.