Education
இன்ஜி., துணை கலந்தாய்வு 8,985 இடங்கள் நிரம்பின

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வில், 8,985 இடங்கள் நிரம்பின.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு, ஜூலை 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதலில் சிறப்பு பிரிவினர், பொதுப் பிரிவினர், 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடந்தது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட கலந்தாய்வில், ஒரு லட்சத்து, 42,167 இடங்கள் நிரம்பின. காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப, துணை கலந்தாய்வு 3ம் தேதி தொடங்கி, 7ம் தேதி வரை நடந்தது.
இதில், 8,985 இடங்கள் நிரம்பின. அதன்படி, மொத்தமாக, ஒரு லட்சத்து, 53,280 பேர், பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை பெற்று இருப்பதாக, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே, எஸ்.சி., அருந்ததியர் பட்டியலில், நிரம்பாத இடங்களை, எஸ்.சி., பட்டியலுக்கு மாற்றி, அதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்க இருந்த நிலையில், சில காரணங்களால், நேற்று தொடங்கவில்லை. இன்று தொடங்க உள்ளது.
இதில், முதலில் விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
