Education
இன்ஜி., துணை கலந்தாய்வு கல்லுாரி தேர்வுக்கு இன்றே கடைசி

சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜி., கல்லுாரிகளுக்கான, 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, முதல்கட்ட கலந்தாய்வு நிறைவில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 295 பி.இ., - பி.டெக்., இடங்கள் நிரம்பின; மீதம், 56 ஆயிரத்து 530 இடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான துணை கலந்தாய்வு விண்ணப்ப பதிவு, கடந்த ஆக., 17 முதல் 31 வரை நடந்தது. மொத்தம், 14 ஆயிரத்து 500க்கும் அதிகமான மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர். இவர் களுக்கான தரவரிசை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை, இன்று மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.