Arts, culture, entertainment and media
காதலியை திருமணம் செய்ய மறுத்த கவுன்சிலர் மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த தி.மு.க.. ஒன்றிய கவுன்சிலர் மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நத்தகாளி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 50; இவரது மனைவி உமாராணி, 45; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்.
இவர்களது மகன் விஜய், 31; பி.எட்.. படிப்பு முடித்து விட்டு பால் ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.. பட்டதாரியான 25 வயது உறவினர் பெண்ணை பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகியுள்ளார். ஆனால் திருமணம் குறித்து அந்த பெண் கேட்டபோது மறுத்து, தனது பெற்றோருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், விஜய், அவரது தந்தை சண்முகம், தாய் உமாராணி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.