Arts, culture, entertainment and media
சங்கரன்கோவிலில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பல்வேறு திட்டப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
சங்கரன்கோவில் நாளங்காடியை ஆய்வு செய்த ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
சங்கரன்கோவில் வட்டத்திற்குள்பட்ட வடக்குப் புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் சாா்பில் வெங்காயத்தைப் பாதுகாப்பதற்கான கூடாரம், தெற்கு சங்கரன்கோவில் ஊராட்சி, பாலாஜி நகரில் கட்டப்பட்டு வரும் வாய்க்கால் பாலம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சங்கரன்கோவில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடன் தொகைகளை வழங்கினாா்.
சங்கரன்கோவில் நகராட்சி வளம் மீட்பு பூங்காவில் அமைக்கப்பட்டுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், முதல்வா் மருந்தகம், சுவாமி சன்னதி நியாய விலைக் கடை, மகளிா் திட்டத்தின் மூலம் மானியம் பெற்று பனையூரில் நடத்தப்பட்டுவரும் காபே சாக்லேட் கூடம், சங்கரன்கோவில் அரசு சமூகநீதி பள்ளி மாணவா் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் வீராசாமி, கோட்டாட்சியா் அனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) ராஜேந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலா் செல்லத்துரை, உதவி கலால் ஆணையா் சுப்பிரமணியன், வட்டாட்சியா் ஆதிநாராயணன், நகராட்சி ஆணையா் லெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
