வருகிறது புதிய உலக வரைபடம்... என்னென்ன மாற்றங்கள்? எதிர்ப்பு தெரிவித்த 7 நாடுகள்!

16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய உலக வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநாவில் இந்தியா ஆதரவளித்துள்ளது.
16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய உலக வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநாவில் இந்தியா ஆதரவளித்துள்ளது. அதே சமயம், அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1569 ஆம் ஆண்டு கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் என்பவர் உலக வரைபடத்தை உருவாக்கினார். இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகையில் இருந்து தொலைவில் இருக்கும் நிலப்பரப்புகள் நிஜ அளவை விடப் பெரிதாகக் காட்டப்பட்டன. குறிப்பாக, ஆப்ரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்து, ஆப்ரிக்காவின் அதே அளவிற்கு காட்டப்பட்டது.
இதனை திருத்தி, பழைய மெர்கேட்டர் வரைபடத்திற்கு பதிலாக, புதிய ஈக்வல் உலக வரைபடத்தை பயன்படுத்த ஐ.நா. முடிவு செய்தது. இதில், அனைத்து கண்டங்கள் மற்றும் நாடுகள் சரியான பரப்பளவில் சரியான விகிதத்தில் துல்லியமாக காட்டப்படுகின்றன.
இதன் மூலம், நிஜமான அளவில் அதாவது, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட ஆப்ரிக்கா பெரிதாக உள்ளது. இந்நிலையில், புதிய உலக வரைபடம் தொடர்பாக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 164 நாடுகள் ஆதரவு அளித்தன.
அதே சமயம், அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்த நிலையில், எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகளும் வாக்களிக்கவில்லை. எதிர்காலங்களில் கல்வி நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்களில் புதிய உலக வரைபடம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
