457 ஆண்டுகளுக்குப் பிறகு; இந்தியா ஆதரவு, அமெரிக்கா எதிர்ப்பு

16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ’உலக வரைபடம்’ தவறாக இருப்பதாகக் கூறி, தற்போது ’சம வரைபடம்’ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் உலக வரைபடத்தை 1569 ஆம் ஆண்டு மெர்கேட்டர் உருவாக்கினார். இந்த வரைபடம், உலகம் உருண்டையாக உள்ளது என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
அதனால், இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகையிலிருந்து தொலைவிலிருக்கும் நாடுகளின் நிலப்பரப்புகள் அதன் உண்மையான அளவைவிடப் பெரிதாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்து பிரதேசத்தை, ஆப்பிரிக்காவிற்குச் சம அளவில் காட்டுகிறது. அதேபோல், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் அதன் இயல்பான அளவைவிட மிக அதிக அளவில் பெரிதாக இருப்பதாக காட்டப்படுகிறது.
இதனால், மக்களுக்கு உலக அரசியல் மற்றும் புவியியல் சார்ந்த தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ’சமவரைபடம்’ உலகெங்கிலும் அனைவருக்கும் உலக அமைப்பைப் பற்றிய சரியான புவியியல் பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமவரைபடத்தில், ஒவ்வொரு நாட்டின் வரைபடமும் அதன் இயல்பான பரப்பளவுக்கான சரியான அளவுடன் இருக்கும்.
இதற்கான தீர்மானம் ஐ.நா மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 164 நாடுகள் ஆதரவளித்தன. இருப்பினும், அமெரிக்கா மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.
ஐநா மன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானமானது கட்டாயச் சட்டம் இல்லை. எனினும், இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனங்கள், வரைபட நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்களில் இந்த புதிய வரைபடத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்படுகின்றன. இதன் மூலம் 457 ஆண்டுக்கால வரைபடம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, புதிய வரைபடம் புழக்கத்திற்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)