வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகம், இரண்டாம் தள கூட்ட அரங்கில் வரும், 18ம் தேதி காலை கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடக்க உள்ளது. காலை, 10:00 முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும்.
11:30 முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் பிரச்னைகளை தெரிவிக்கலாம். மதியம், 12:30 முதல், 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.