செப்.,18 ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்
தேனி, செப்.16–கலெக்டர் அலுவலகத்தில் செப்., 18 காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடக்கிறது.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் தொடர்பான குறைகள், புகார்களை தெரிவிக்கலாம். மனுக்களாகவும் வழங்கலாம். கூட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.