Lifestyle and human interest
கஞ்சா விற்பனை பண்ருட்டியில் 2 பேர் கைது
பண்ருட்டி: பண்ருட்டி மணி நகரில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னை ராயபுரம் ராமமூர்த்தி தெரு ராமசந்திரன் மகன் பிரகாஷ்,28; பண்ருட்டி புதுப்பேட்டை அரசூர் மெயின் ரோடு பன்னீர்செல்வம் மகன் திருவரங்கன்,19; என்பதும், இருவரும் கஞ்சா விற்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதி்நது இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.