Politics
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
ஸ்ரீபெரும்புதுார்:விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பிய பயணியரிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சொந்த ஊர்களுக்கு சென்று ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை திரும்பும் பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார் வந்தது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட்டில், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்த ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், 18 ஆம்னி பேருந்துகளில் பயணியரிடமிருந்து பல மடங்கு கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.
இதையடுத்து, விதிமீறி அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.