Lifestyle and human interest
தகராறில் சித்தப்பா மீது தாக்குதல் அண்ணன் மகன் உள்பட 4 பேர் கைது
நாமகிரிப்பேட்டை:சித்தப்பாவை தாக்கிய அண்ணன் மகன் உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 50;
விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் கருப்பண்ணன் மகன் அருள்முருகன்,
35, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அருள்முருகன், அவரது, 17
வயது மகன் மற்றும் இவர்களது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த
கருப்பண்ணன் மகன் வேல்முருகன், 42, செல்வம் மகன் சின்னுசாமி, 30,
ஆகிய, நான்கு பேரும் சேர்ந்து ராமசாமியை தகாத வார்த்தைகளால் பேசி
தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ராமசாமியை அக்கம் பக்கத்தினர்
மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த னர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமசாமி கொடுத்த புகார்படி, தாக்குதலில் ஈடுபட்ட அருள்முருகன்,
அவரது மகன் மற்றும் உறவினர்களான வேல்முருகன், சின்னுசாமி ஆகிய,
நான்கு பேரையும் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.