Politics
தாராபுரம் தொகுதியில் 22 பேர் மனுக்கள் ஏற்பு
தாராபுரம்:தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், 22 மனுக்கள் ஏற்கப்பட்டன.
த.வெ.க., சார்பில் சத்யபாமா, அ.தி.மு.க., சார்பில் பானுமதி, தி.மு.க., சார்பில் சுகன்யா, இ.கம்யூ., சார்பில் லட்சுமணன், நா.த.க., சார்பில் கார்த்திகா உள்ளிட்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், 39 வேட்பாளர்கள் 51 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 22 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. முறையான ஆவணங்கள் இணைக்கப்படாத 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து, நாளை மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். அதன்பின், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.