Politics
மனைவி நல வேட்பு விழா 400 தம்பதியர் பங்கேற்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மீரா மகால் திருமண மண்ட-பத்தில், உலக சமுதாய சேவா சங்கம், ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் தவமையங்கள் சார்பில், வேதாத்-திரி மகரிஷி துணைவியார் லோகாம்பாளின், 112வது பிறந்த
நாளையொட்டி, மனைவி நல வேட்பு விழா நேற்று நடந்தது. மொத்தம், 400 தம்பதிகள் பங்கேற்றனர். முன்னதாக, வேதாந்தி-ரிய கும்மி நடனம் நடந்தது. தொடர்ந்து, உலக சமுதாய சேவா சங்கக்கொடி ஏற்றப்பட்டது.
உலக சேவா சமுதாய சங்க மூத்த பேராசிரியர் ஆழியாறு அருள்-நிதி பெருமாள், அவரது துணைவியார் சந்திரா ஆகியோர், தம்பதி-யராக, விழாவை துவக்கி வைத்தனர். தம்பதியர் ஒருவருக்கொ-ருவர் அருட்காப்பு கூறி கொண்டனர். பின்னர் மலர் மற்றும் கனிந்த பழங்களை கையில் எடுத்து, கண்கள் மூலம் காந்த பரி-மாற்றம் செய்து கொண்டு, பூ மற்றும் பழங்களை மாற்றி கொண்-டனர்.இருக்கையில் அமர்ந்து கொண்டு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் கைகளை பற்றிக்கொண்டு, தங்களது திருமணம் நடந்தது முதல், இதுவரை நடந்த நிகழ்வுகள் வரை, மலரும் நினைவுகளை நினைத்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்-பட்டன. ஏற்பாடுகளை, ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்-டளை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.