Lifestyle and human interest
அரசு அலுவலகத்தில் நூதன போராட்டம்; சாக்குப் பைகளில் கொண்டுவரப்பட்ட நாய்க்குட்டிகள்

தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவது குறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், நாய்க்குட்டிகளைப் பிடித்து வந்து அலுவலகத்தில் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம், நாசிக்கின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வந்தன. நிபாட் நகரில் தெருநாய்களின் தொல்லையை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தவில்லை என ’யுவ சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக யுவசேனா அமைப்பின் மாவட்ட தலைவர் விக்ரம் அவரது ஆதரவாளர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்றவர்கள், சாக்குப் பைகளில் 3 நாய்க்குட்டிகளைப் பிடித்துச் சென்று அலுவலக மேசை மீது விட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் பொதுமக்களைத் திரட்டி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)