இலங்கை பெண் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னை, திருமங்கலம் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த, 68 வயது பெண் வீட்டில், அமலாக் கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இலங்கையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி, 68. இவர், தன் குடும்பத்தினருடன், 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தார்.
தற்போது, சென்னை, திருமங்கலத்தில், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் வீட்டில் வாடகைக்கு குடி யிருந்து வருகிறார். இவரது கணவர், கடந்தாண்டு இலங்கைக்கு சென்று விட்டார் .
இவர்களது இரு மகன்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். சென்னையில் தனியாக இருக்கும் கிருஷ்ணகுமாரியை, அவரது சகோதரர்கள் அடிக்கடி வந்து பார்த்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு பேர், துணை ராணுவப்படை பாதுகாப்புடன், கிருஷ்ணகுமாரி வீட்டில் நேற்று காலை, 6:45 மணி முதல் சோதனை நடத்தினர்.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியில், கண்ணன் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 'கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து, விரைவில் அறிவிக்கப்படும்' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.