ஸ்கூட்டர் மீது கார் மோதி இளம்பெண் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த காளசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி சந்தியா, 25; இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், உலகங்காத்தான் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் சந்தியா வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தனது தந்தை சேகருடன் உலகங்காத்தான் கிராமத்தில் இருந்து காளசமுத்திரம் கிராமத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார். பைக்கை சந்தியா ஓட்டினார்.
உலகங்காத்தான் பஸ் நிறுத்தத்தில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சந்தியா இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.