Economy, business and finance
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 21 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 53 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு! (செப். 17)

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் நேற்று உயர்வுடன் முடிந்தது. இன்று (செப். 17) பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருந்த நிலையில் சென்செக்ஸ் சற்று சரிவுடனும் நிஃப்டி சற்று உயர்வுடனும் முடிந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,182.62 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 21.86 புள்ளிகள் குறைந்து 74,314.59 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
ஆனால் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 23,270.60 புள்ளிகளில் நிலை பெற்றது.
நிஃப்டி50 குறியீட்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எட்டர்னல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.98 சதவீதம், 0.69 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட், ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்ந்து முடிந்தன. அதே நேரத்தில் நிஃப்டி பொதுத்துறை, தனியார் வங்கி பங்குகள் சரிந்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் டாடா ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எட்டர்னல், இன்டெர்குளோப் ஏவியேஷன், மாருதி சுசுகி ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள். டைட்டன், ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
Stock Market Live: Sensex flat, Nifty near 23,300
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.