Politics
ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

நாமக்கல்:ஆவணி மாத அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்மாத முதல் ஞாயிறு, தமிழ், தெலுங்கு, ஆங்கில
வருட பிறப்புகள், ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி
உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் நடைபெறும். அந்த
வகையில் ஆவணி அமாவாசையான நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை,
வெற்றிலை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து
பட்டாடை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா
தீபாராதனை காட்டப்பட்டது. அமாவாசை என்பதால், பல்வேறு பகுதிகளில்
இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.