Crime, law and justice
உரிமையாளர்கள் அலட்சியத்தால் ரோட்டில் திரியும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உரிமையாளர்கள் அலட்சியத்தால் ஆடு, மாடுகள் நடுரோட்டில் திரிவதால் விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். கால்நடைகளும் உயிரிழக்கின்றன.
மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதே சமயம் முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் குறைந்தபாடு இல்லை. இந்நிலையில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக மாடுகள், ஆடுகளை அவிழ்த்து விடுகின்றனர். இவை ஆபத்தை உணராமல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, மதுரை ரோடு, ரயில்வே பீடர் ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் திரிகின்றன. அவ்வாறு வரும் போது வேகமாக வரும் வாகனங்கள் மோதி சிறிய அளவிலான விபத்துகள் நடக்கின்றன.
இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. ஆகையால் ரோட்டில் கண்டபடி திரிய விடும் கால்நடை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட வேண்டும். -------------