Religion
நெருங்கும் கும்பாபிஷேக விழா... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கிய சிறப்பு பூஜைகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியுள்ளன. இதற்காக வடக்கு ஆடி வீதியில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்களும், 56 யாகசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மீனாட்சி அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அடங்கும். கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளன. காலை 7 மணிக்கு மேல் அம்மன் சன்னதி மற்றும் சித்தி விநாயகர் சன்னதி முன்பு விக்னேஸ்வர பூஜையுடன் இந்த பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து பூஜைக்காக சுவாமியிடம் அனுமதி பெறுதல், கஜபூஜை, கோ பூஜை, தனபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.
கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளுக்காக 7 புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
