குட்ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளி துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி
ஊட்டி: - ஊட்டி குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியில், 32வது ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல்
ஊட்டி குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியில், 32வது ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் ஷாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது.
பத்து நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஜூனியர் வீரர்களுடன் போட்டியிட்ட குட்ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஆண்கள் அணி, 2வது இடத்தையும், பெண்கள் அணி, 4வது இடத்தையும் பிடித்ததுடன், இரண்டு தனி நபர் இறுதி சுற்று நிலைகளை பெற்றனர்.
இதில், ஜெனில் சர்தாரா, ஆண்களுக்குக்கான தனிநபர் ஏர் ரைபிளில் தங்கமும், ஆண்களுக்கான தனிநபர் ஏர் ரைபிளில் வெள்ளி வென்றார். ஹிரவ் ஆண்களுக்கான தனிநபர் மற்றும் அணி ரைபிளில் வெள்ளியும், ரிஷி ஆண்களுக்கான தனிநபர் மற்றும் அணி ஏர் ரைபிளில் வெள்ளியும், ஆதிவ், ஆண்களுக்கான தனிநபர் மற்றும் வணி ஏர் பிஸ்டலில் வெள்ளியும் வென்றனர்.
ஆண்களுக்கான ஏர் ரைப்பிள் தகுதி சுற்றில், ஜெனில் சர்தாரா, 612.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பெண்களுக்கான ஏர் ரைப்பிள் தகுதி சுற்றில், ஜகவி ரமணி 611.5 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.