கொசுக்கடியில் இருந்து தப்பிக்க புதிய திரவம்: அமைச்சர் அருண்ராஜ்

சென்னை: ''கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, உடலில் பூசிக்கொள்ளும் வகையிலான திரவ மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இது சோதனை முறையில் பயன்படுத்தப்பட உள்ளது ,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
பருவமழை தொடங்குவதால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மறுக்க கூடாது கொசுக்கடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, தென்காசி மாவட்டம், கடையநல்லுாரில், உடலில் பூசிக்கொள்ளும் திரவம் ஒன்றை, சோதனை முறையில் பயன்படுத்த உள்ளோம்.
உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தால், 10 சதவீத இதயநோய் மற்றும் 15 சதவீத பக்கவாத நோய் குறையும். அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள், பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை எடுத்து வர வேண்டாம்.
பிளாஸ்டிக் கவர்கள், கழிவுநீர் கால்வாய்களில் சிக்கி கொள்கின்றன. சூடான சாம்பாரை பிளாஸ்டிக் கவர்களில் அடைப்பதால், நோய் பாதிப்புகள் ஏற்படும்.
சென்னையில் உள்நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், நேரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் நோயாளிகளுக்கு, மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது.
அறிவுறுத்தல்கள் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் தொகை குறைவாக இருப்பதாகக் கூறி, சிகிச்சை அளிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.