Politics
ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் உடல்: போலீசார் விசாரணை
கரூர்:கரூர் அருகே, ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவர் குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியில், தண்டவாளம் அருகே, முகத்தில்
படுகாயங்களுடன், 70 வயதுடைய முதியவர் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் கரூர் ரயில்வே போலீசுக்கு தகவல்
கொடுத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாத
முதியவர் உட லை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முதியவர் சந்தன
கலரில், பிரவுன் கோடு போட்ட சர்ட் மற்றும் நீல நிற கலரில் லுங்கி
அணிந்திருந்தார். மேலும், அவரது பாக்கெட்டில், ஆண் பொம்மையுடன் கூடிய
சாவி ஒன்றும் இருந்தது.
கரூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.