Politics
சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு பேரணி
ஆத்துார்; ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பில், அதன் வளாகத்தில் சமரச தீர்வு குறித்து விழிப்பு-ணர்வு பேரணி நேற்று நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதில் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி மாணவ, மாணவியர், நீதிபதிகள், நீதி-மன்ற பணியாளர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர், தனி நபர், குடும்பம், வீட்டு வாடகை, மின்வாரியம், பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரச தீர்வு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, உடையார்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை வழியே சென்று, நகராட்சி அலுவலகத்தில் நிறைவு செய்-தனர்.
அங்கு நீதிபதி ரவிச்சந்திரன், ''அனைத்து நீதிமன்-றங்களில் சமரச தீர்வு மையம் செயல்படுகிறது. அதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றும் பல்வேறு வழக்குகள், சமரசம் மூலம் தீர்வு காணப்படும். இதுகுறித்து பெற்றோர், மக்க-ளிடம், மாணவர்கள் எடுத்துரைக்க வேண்டும்,'' என்றார்.
சார்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், மாவட்ட உரி-மையியல் நீதிமன்ற நீதிபதி ஜான்சிராணி, ஆத்துார் வக்கீல் சங்க தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்-டுக்குழு மாநில இணை செயலர் ராமதாஸ் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.