தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (செப்.,11) நடக்கும் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சிகளை முன்னிட்டு மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள்ராமநாதபுரம் பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு, தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்ல வேண்டும். எதிர் திசையில் மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்களும் இந்த வழியையே பயன்படுத்த வேண்டும்.
துாத்துக்குடி, விருதுநகர், கமுதி, முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை, சிக்கல், கீழக்கரை வழியாக செல்ல வேண்டும். செப்.12 முதல் வழக்கமான மானாமதுரை, பரமக்குடி பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.