இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் போக்குவரத்து மாற்றம்
மதுரை: இமானுவேல் சேகரன் நினைவு முன்னிட்டு தென் மாவட்டங்களில் இன்று (செப்.,11) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனுார் வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்டத்திலிருந்துவரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் திருப்பத்துார், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனுார் வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
மதுரை, திண்டுக்கல், தேனி மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனுார் வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் அதேவழியாக திரும்பி செல்ல வேண்டும்.